உலகை மாற்றப் போகும் பொருளாதாரப் புரிதல் – மறைக்கப்பட்ட உண்மைகள்: 3
தவறான புரிதல் எண் 3:
"வங்கிகள் தங்களிடம் சேமிக்க படும் வைப்பு நிதி(deposit amount)யைதான் , கடனாக வழங்குகிறது. அதாவது, வங்கிகள் சேமிப்பாளர்கள் கொடுக்கும் நிதியையே, கடனாக கடன் வாங்குபவர்களுக்கு அளிக்கிறது".
முந்தைய பதிவில், செலவின் மூலம் பணத்தை உருவாக்கும்-புழக்கத்தில் விடும் அதிகாரத்தை கொண்ட அரசாங்கம், எந்த அடிப்படையில் அதனை வெளியிடுகிறது என்பதை விரிவாக பார்த்தோம்.
தங்க மாற்று நாணய முறை என்னும் தங்கத்துடன் இணைக்கப் பட்ட பண வெளியீடு முறையை கை விட்ட பிறகு, தற்பொழுது உள்ள பண வெளியீடு முறையில், வெளியிடும் பணத்தின் அளவு தங்கத்தினை சார்ந்து இல்லை என்பதையும், அரசாங்கத்திற்கு பணம் வெளியிடுவதில், தங்கத்தின் இருப்பை சார்ந்த வரம்போ, தடையோ இல்லை என்பதையும் பார்த்தோம்.
தங்கத்திற்கு மாற்றாக இருந்த பணம், சுய மதிப்பு பெற்றது.
அதன் வெளியீட்டிற்க்கு வரம்பு இருந்தது.
எனவே, நிதி பற்றாக்குறை இருந்தது.
பற்றாக்குறையினால், முதலீடு மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருந்தது.
தற்பொழுது உள்ள சுய மதிப்பு அற்ற பணம். அரசாங்கத்தின் உத்தரவாதத்தினால், மதிப்பினை பெறுகிறது.
பண வெளியீட்டிற்கு அளவு இல்லாததால், அனைவரையும் உற்பத்தியில் ஈடுபட செய்யவும், உற்பத்தியை மிகப் பெரும் அளவு அதிகரிக்கவும், தேவையான பணத்தை புழக்கத்தில் விட எந்த தடையும் அரசாங்கத்திற்கு இல்லை.
சுய மதிப்பற்ற, இந்த காகித பணத்திற்கு பற்றாக்குறை இல்லாததால், முதலீட்டு பணத்திற்கு இருந்த பெரும் மதிப்பு, இந்த பண அமைப்பு முறையில் இல்லை.
தங்க மாற்று நாணய முறையில், முதலீட்டு பணத்திற்கு இருந்த மதிப்பை போல், தற்பொழுது உள்ள சுய மதிப்பற்ற காகித பண அமைப்பு முறையில், உற்பத்தியினை உருவாக்கும் நிஜ வளங்களாகிய மனித வளமும், மற்ற வளங்களுமே பெரும் மதிப்பினை பெறுகின்றன.
அனைவரையும் உற்பத்தியில் ஈடுபட செய்யும் அளவிற்கு, அரசாங்கம் பணத்தை புழக்கத்தில் விடலாம் என்பதால், அரசாங்கத்தின் இடம் இருந்துதான் பணம் உருவாவதால், அரசாங்கத்தின் செலவே பண உற்பத்தியை உண்டாக்குகிறது (Government spending itself creates currency), பணப் புழக்கத்தை அதிகரிக்கிறது.
அதாவது, அரசாங்கம் செலவு செய்யும் பொழுது, பயனாளியின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் நிகழ்வுதான் பண உருவாக்கம்.
பணம் வெளியிடும் அதிகாரத்தை, அரசாங்கம் தன்னுடைய வங்கியான ரிசர்வ் பேங்க் இடம் அளித்து உள்ளது.
ரிசர்வ் வங்கி, வர்த்தக வங்கிகளின் மூலம் பணப் புழக்கத்தை மக்களிடம் சென்றடைய செய்கிறது.
மத்திய ரிசர்வ் வங்கி, அனைத்து வர்த்தக வங்கிகளையும், முழுவதுமாக மேற்பார்வை இட்டு, தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
Government spending creates currency, அதாவது அரசாங்கத்தின் செலவே பண உற்பத்தியை உண்டாக்குகிறது என்பதை பார்த்தோம்.
அதனுடன், bank lending also creates currency, அதாவது வங்கி கடனும் பணத்தினை உருவாக்குகிறது.
அது எப்படி?, வாடிக்கையாளர்கள் தங்களிடம் வைப்பு வைத்துள்ள நிதியினை தானே, கடனாக வங்கிகள் அளிக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.
சரியான கேள்விதான்.
பண வெளியீட்டிற்கு வரம்பு இருந்ததால், தங்கம் சார்ந்த பண அமைப்பு முறையில் தான், வங்கிகள் அப்படி செய்தன.
தற்பொழுது உள்ள சுய மதிப்பற்ற காகித பண அமைப்பு முறையில், அந்த நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு இல்லை.
வங்கிகள் வாடிக்கயாளர்களுக்கு கடன் கொடுக்கும் பொழுது, அவர்களது வங்கி கணக்கில் கடன் தொகையை வரவு (credit) வைக்கிறது.
அப்படி வரவு வைப்பதுதான், புதிய பண உருவாக்கம்.
எப்படி, அரசாங்கம் செலவு செய்யும் பொழுது, பயனாளியின் வங்கி கணக்கில் வரவு வைப்பது, பணத்தினை உருவாக்குகிறதோ, அதே போல், வங்கி கடன் கொடுக்கும் பொழுது, பயனாளியின் வங்கி கணக்கில் வரவு வைப்பது, பணத்தினை உருவாக்குகிறது.
இது திருப்பி கொடுக்க வேண்டிய கடன் ஆகையால், திருப்பி கொடுக்கும் வரையில், அது பணமாக செயல் படுகிறது, பண புழக்கத்தை அதிகரிக்கிறது.
பணத்தை உருவாக்கும் பெரும் அதிகாரத்தை கொண்டுள்ள அரசாங்கத்திடம், செலவிடும் பொழுது, பணம் எங்கிருந்து வருகிறது என்று கேட்க முடியாது.
ஆனால், வங்கிகள் கடன் கொடுக்கும் பொழுது பணத்தினை உருவாக்குகின்றன என்றால், அந்த கடன் தொகையை, பயனாளிகள் வங்கி கணக்கில் இருந்து எடுக்கும் பொழுதோ, மற்றொரு கணக்கிற்கு மாற்றும் பொழுதோ, அதற்கான தொகையை எங்கிருந்து கொடுக்கும் என்ற கேட்பது சரியான கேள்வி.
வங்கிகளூக்குள் நடக்கும் நிதி பரிமாற்றத்தை கட்டுரை 2 ல் விரிவாக பார்த்தோம்.
இந்திய வங்கிகளுக்குள் ஒரு மாதத்தில் (ஜூன் 2026)நடக்கும் நிதி பரிமாற்றத்தின் மொத்த மதிப்பு ரூபாய் 324 லட்சம் கோடி.
ஒவ்வொரு வங்கியும் ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான கணக்குகளுக்கு இடையே நிதி பரிமாற்றம் செய்யும், அதன் மதிப்பு மிகப் பெரும் அளவில் இருக்கும்.
குறிப்பிட்ட கடன் தொகை மற்றொரு வங்கியின் கணக்கிற்கு மாற்றப்படும் பொழுது, மற்ற வங்கிகளுக்கு மாற்றப்படும் அன்றைய மொத்த தொகை, மாற்றும் வங்கியின் அன்றைய பணமாற்ற மொத்த வரவு தொகைக்கு அதிகமாக இருந்தால், மத்திய ரிசர்வ் வங்கியின் உடனடி கடன் அந்த தேவையை தானாகவே பூர்த்தி செய்யும்.
நாள் முடிவில், நிதி அதிகம் உள்ள வங்கியிடம் இருந்து கடனாக பெற்று, ரிசர்வ் வங்கியின் உடனடி கடன் அடைக்கப் படும்.
வட்டி விகித இலக்கை (policy rate rate) அடைய வேண்டிய கட்டாயம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு இருப்பதால், வர்த்தக வங்கிகளுக்கு தேவை படும் பொழுது நிதியினை வழங்கும் நிர்ப்பந்தம் (lender of last resort) அதற்கு உள்ளது.
தற்பொழுது உள்ள சுய மதிப்பற்ற காகித பண அமைப்பு முறையில்தான், பண உருவாக்கத்திற்கு, தங்கம் சார்ந்த வரம்பு இல்லாததால், இது சாத்தியம் ஆகிறது.
வங்கிகள் கடன் வழங்கும் பொழுது பணத்தினை உருவாக்குகிறது என்ற உண்மையை விளக்கி உள்ளோம்.
வங்கிகள், தங்களிடம்
சேமிக்க படும் வைப்பு நிதியை கடனாக வழங்குகிறது என்பது தவறான புரிதல்தானே.
பின் குறிப்பு:
வங்கிகளூக்குள் நடக்கும் நிதி பரிமாற்றம் (தொடர் 2 ல் இருந்து):
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, பொருளாதார வளர்ச்சிக்காகவும் பண வீக்கத்தை கட்டுப் படுத்தவும், ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தை இலக்காக (Target policy rate) நிர்ணயிக்கிறது. இந்த வட்டி விகிதத்தை சார்ந்துதான், கடன்களுக்கான வட்டி விகிதத்தை, மற்ற வங்கிகள் நிர்ணயம் செய்கின்றன. இந்த இலக்குக்கு உட்பட்ட வட்டி விகிதத்தை கொண்டுதான், மத்திய வங்கி பணப் புழக்கத்தை நிர்வகிக்கிறது. இந்த இலக்கை நிர்வகிப்பது ரிசர்வ் வங்கியின் வெகு முக்கிய பணி ஆகும்.
தினமும் வர்த்தக வங்கிகளுக்குள் நிதி பரிமாற்றம் எப்பொழுதும் நடந்து கொண்டு இருக்கும். மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து வர்த்தக வங்கிகளும், குறிப்பிட்ட அளவு வைப்புத் தொகையை, சட்டப்படி தேவைப்படுகின்ற இருப்பு நிதியாக (statutory reserve requirement), மத்திய வங்கியில் வைத்திருக்க வேண்டும். வங்கிகள் தங்களது தின பண பரிமாற்றத்திற்கு தேவைக்காக இருப்பு நிதியை அதிகமாகவே மத்திய வங்கியில் பராமரிக்கும். அரசாங்கம், மத்திய வங்கி மற்றும் வர்த்தக வங்கிகளுக்கு இடையே பண பரிமாற்றம், இந்த இருப்பு நிதியை கொண்டுதான் நடக்கும். உதாரணத்திற்கு, ஒரு நபர் X இன்னொரு நபர் Y க்கு நிதி மாற்றம் (transfer) செய்கிறார் என்றால், X ன் வங்கி, X ன் வைப்புத் தொகையை, மாற்றம் செய்யும் நிதியின் அளவிற்கு, குறைத்து விட்டு, மத்திய வங்கியில் தன் கணக்கில் உள்ள இருப்பு நிதியை, மாற்றம் செய்ய வேண்டிய நிதியின் அளவிற்கு, மத்திய வங்கியில் உள்ள Y ன் வங்கியின் கணக்கிற்கு மாற்றம் செய்யும். Y ன் வங்கி அந்த நிதியின் அளவிற்கு Y ன் கணக்கில் வரவு காண்பிக்கும். அதே போல், அரசாங்கம் X ற்கு பணம் கொடுக்க வேண்டும் என்றால், மத்திய வங்கியில் உள்ள X ன் வங்கியின் கணக்கில், இருப்புத் தொகையை வரவு காண்பிக்கும். X ன் வங்கி அந்த நிதியின் அளவிற்கு X ன் கணக்கில் வரவு காண்பிக்கும்.
இந்த இருப்பு நிதி பரிமாற்றம், வர்த்தக வங்கிகளுக்கு இடையில் நடக்கும் பொழுது, மொத்த இருப்பு நிதியில் (total reserves in the banking system) எந்த மாற்றமும் இருக்காது. பரிமாற்றத்தின் போது, எந்த அளவிற்கு ஒரு வங்கியின் தொகை குறைகிறதோ, அதே அளவிற்கு மற்ற வங்கிகளின் மொத்த தொகை அதிகரித்து இருக்கும்.
வர்த்தக வங்கிகள், மத்திய வங்கியுடன் அல்லது அரசாங்கத்தின் உடன், நிதி பரிமாற்றம் செய்யும் பொழுது மட்டுமே, மொத்த இருப்பு நிதி குறையும் அல்லது கூடும்.
தினமும், நாள் முழுவதும் வர்த்தக வங்கிகளுக்கு இடையில் நிதி பரிமாற்றம் நடக்கும் பொழுது, ஒரு வங்கிக்கு நேரும் இருப்பு நிதி குறைவை தீர்க்க, மத்திய வங்கியின் 'உடனடி அன்றே தீர்க்க வேண்டிய கடன்' தானாகவே நிகழும் (Intra Day Loan triggered automatically). நாள் முடிவில், இருப்பு நிதி குறைவாக இருக்கும் வங்கி, நிதி அதிகமாக உள்ள வங்கியிடம் இருந்து, கடனாக பெற்று, மத்திய வங்கியின் கடனை அடைக்கும். தேவையான(demand) நிதியும், கிடைக்கக் கூடிய(supply) நிதியும் சம நிலையில் இருப்பதால், வட்டி விகிதம் கட்டுக்குள்ளேயே இருக்கும்.
Rajendra Rasu
The author writes on monetary systems and political economy
Comments
Post a Comment