மாநில நிதி நிலைமை - தவறான தகவல் பரப்ப படுகிறது
நிதி நிலைமை என்பது ஒரு மாநிலத்தின், மக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிப்பது. நிதியையும், அதன் நிலைமையையும் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல், பெரும்பாலானோர் பேசுவது பெரும் வேதனை.
அடிப்படை புரிதல் என்ன?
பொருள் உற்பத்தி, பொருளாதாரத்தின் அடிப்படை.
ஒருவரை கூட நீக்காமல், அனைவரும் உற்பத்தி செய்யும் பொழுது, அவர்களது உற்பத்தி திறன், அனைவரது தேவையையும் பூர்த்தி செய்யும் பொழுது, அது சிறப்பான பொருள்-ஆதாரம் என்று சொல்ல முடியும். இதுதான் Real Economy which produces real wealth - the goods and services for consumption. இது ஒன்றும் Rocket Science கிடையாது.
இந்த உற்பத்திக்கு, தடை ஏற்படுத்தும் எதுவுமே, மக்களுக்கு பொருள் ஆதாரத்திற்கு எதிர் ஆனதுதான். பொருளாதாரம் பணமயமாக்கப்படும் பொழுது, அந்த பணமயமாக்கம் சார்ந்த அளவீடுகள், நிஜ பொருளாதார உற்பத்தியை தடுப்பது, வேலியே பயிர் உற்பத்தியை தடுப்பது போல.
இந்த பணமயமாக்க அளவீடுகள் ஏற்படுத்தும் பேரிழப்பை, தடுக்க முடியாதா?
பண வெளியீட்டின் அளவு, மற்றும் பண மாற்ற விகிதத்தை நிர்ணயம் செய்யும் பண கட்டமைப்பு (Monetary Regime) முறை, தங்க கையிருப்பு சார்ந்து இருந்த காலத்தில், இந்த பேரிழப்பை தடுக்க முடியாது. ஆனால், உலக நாடுகள் அந்த பண கட்டமைப்பு முறையை ஆகஸ்ட் 15, 1971 ல் கைவிட்டன. இந்த நிலையான பண மாற்று விகிதத்தில் இருந்து, வெளியிடும் பொழுதே மதிப்பு உள்ள பொருட்கள் எதையும் சாராத, தங்கமோ, வெளிநாட்டு பண கையிருப்பும் சாராத, பண கட்டமைப்பு முறைக்கு, இந்தியா 1993 மார்ச் மாதத்தில் மாறியது.
இந்த மாற்றத்தின் பொருள் என்ன என்றால், கடைக்கோடி மக்களையும் சார்ந்த, அனைவரது பொருளாதார விடுதலை. எப்படி என்றால், தங்க கையிருப்பு சார்ந்த பண கட்டமைப்பு காலத்தில் ஏற்படுத்திய, பட்ஜெட் நடைமுறைகள், அதாவது, மக்கள் செலுத்தும் வரி வருமானத்தை கொண்டும், கடன் வாங்கியும், செலவு செய்ய வேண்டும் என்ற தேவை, அன்றில் இருந்து காலாவதி ஆனது.
பணம் வெளியிடும் அதிகாரம், ஒன்றிய அரசாங்கத்திடம் மட்டுமே உள்ளது. மாநில அரசாங்கங்களும், பொது மக்களை போல, பண உபயோகிப்பாளரே. மாநில அரசு, வரி வருமானத்தை கொண்டுதான், செலவு செய்ய முடியும். எனவே, ஒரு மாநிலத்தில் வசூலிக்கப்படும் வரி முழுவதுமாக, அந்த மாநிலத்திற்கே கொடுக்க வேண்டும்.
மேலும் அறிந்து கொள்ள:
State Finances in a Fiat Currency System
கஜானாவில் பணம் இல்லை என்பது, மாநிலத்திற்கு ஒரு பிரச்சினையே இல்லை
Treasury Not Having Money Is Not a Problem For a State - Part II