ஏழைகளே இனி இல்லை' இயக்கத்தின் போட்காஸ்ட் வலையொலி

 வணக்கம்—நண்பர்களே, வரவேற்கிறோம். 


PoorNoMore 'ஏழைகளே இனி இல்லை' இயக்கத்தின் போட்காஸ்ட் வலையொலி. இந்த வலையொலி, நாட்டின் வளர்ச்சியை,  நமது சக மனிதர்களின் வளர்ச்சியை உச்சத்திற்கு எடுத்துச் செல்ல வைக்கும். இது நாம் அன்றாடம், பொழுது போக்க கேட்பது அல்ல. சிறிது கடினமான விசயம். நேரம் ஒதுக்கி பொறுமையாக கேளுங்கள். அனைவரது வாழ்வும் உயர, நமது நாடு அற்புதமான வளர்ச்சியை காண. அன்புடன் வேண்டுகிறேன், முழுவதும் கேளுங்கள். 

PoorNoMore போட்காஸ்ட் வலையொலி : 


வலையொலியின் தலைப்பு: *ஏழைகளே இல்லாத உலகம்: அரசுகள் ஒழிக்க மறுக்கும் வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவோம். வளர்ந்த நாடாக மாறுவோம்*.
  
பாகம் ஒன்று, "''தவிர்க்க முடியாத ஏழ்மை" எனும் பொய். 

கோடிக்கணக்கான மக்களை நிரந்தரமாக ஏழ்மையில் சிறைப்படுத்தி, 'ஏழ்மை என்றும் இருக்கும்', ஏழ்மையில் இருந்து அவ்வளவு எளிதாக வெளிவர முடியாது என்ற அப்பட்டமான பொய்யை, இந்த வலையொலியில் உடைக்கிறோம். 

வறுமை என்னும் கொடும் சிறையில் இருந்து அனைவரையும், ஒவ்வொரு தனி மனிதரையும் வெளியில் கொண்டு வரும் சாவியை தன்னிடம் வைத்துள்ள அரசு, ஏன் அதை மறைத்து வைத்துள்ளது? என்பதை வெளிப்படுத்துவோம்.

இது வெறும் வார்த்தைகள் அல்ல - ஏழ்மையிலேயே நீங்கள் எப்படி வைக்கப் பட்டு இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தெளிவாக, எந்த வித சந்தேகமும் இல்லாமல் புரிந்து கொள்ளும் இந்த நேரம், உங்கள் குடும்பம் மதிக்கத்தக்க வாழ்க்கை வாழ்வதற்கு, நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடி. 

இது சாத்தியமா, எப்படி என்பதை மேலும் கேட்கலாம் வாருங்கள். 

வளம் நிறைந்த நம் நாட்டில், உழைப்பு தேவைகளை கொடுக்கும் பொழுது, வறுமை ஒழிக்கப்படாதது பெரும் துரோகம் மட்டும் அல்ல, குற்றமும் கூட.


பணம் உருவாகும் இடம் அரசாங்கம், 

பணத்தை உருவாக்குவது அரசாங்கம். 

அரசாங்கம், தான் செய்கிற செலவால்தான், புதிய பணத்த வெளியில் புழக்கத்தில் விட முடியும். 

அதை அரசாங்கம் எப்படி செய்கிறது? 

அரசாங்க உபயோகத்திற்காக பொருட்கள், சேவைகள், மற்றும் பணியாளர்களின் வேலை நேரத்தை வாங்குவதன் மூலம், அரசாங்கம் பணத்தை புழக்கத்திற்கு அளிக்கிறது.

அப்படி செய்யும் செலவு அரசாங்கத்திடம் உள்ள தங்கத்தின் அளவிற்குத் தான் செய்யமுடியும் என்று சில காலங்களுக்கு முன் வரை இருந்த சர்வதேச கட்டுப்பாடு, அரசாங்கம் வாங்கும் பொருட்கள், சேவைகள், மற்றும் பணியாளர்களின் அளவை பெரிதும் குறைத்தது. 

அது நாட்டின் பாதுகாப்பு தேவையாக இருக்கலாம், உங்களை வேலையில் அமர்த்துவதாக இருக்கலாம், சிமெண்ட் ஆக இருக்கலாம், இரும்பு கம்பியாக இருக்கலாம், 

 - அனைத்தும் குறைக்க பட்டது. 

அதனால் நாட்டின் வளர்ச்சி, மக்களின் வளர்ச்சி, ஏழ்மை ஒழிவது என்று அனைத்துமே பெரிதும் பாதிக்கப் பட்டது.

ஆனால் அந்த கட்டுப்பாடு இப்பொழுது இல்லை. 1971-ஆம் வருடத்திற்கு பிறகு, அந்த சங்கிலி உடைக்கப் பட்டது.  

ஒன்றிய அரசு, எந்த வித வரம்பும் இல்லாமல், செலவு செய்யும் அதிகாரத்தை முழுவதுமாக திரும்ப பெற்றது. 

காலாவதி ஆன, தங்கத்துடன் இணைக்கப்பட்ட பண கட்டமைப்பு முறையினால், உருவாக்கப்பட்ட பட்ஜெட் நடைமுறையான, வரியினை கொண்டு செலவு செய்யும் வழக்கம், இனி தேவை இல்லை. 

பணத்தை உருவாக்கி, அதனை செலவு செய்யும் அதிகாரத்தை கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்காக எந்த அளவு வேண்டுமானாலும், வேலைக்காக மக்களை, பொருட்களை, சேவைகளை அரசாங்கத்தால் வாங்க முடியும். 

பணத்திற்கு மாற்றாக தங்கத்தினை பெறலாம் என்றிருந்த பண உருவாக்க கட்டமைப்பு 1971 ஆம் வருடத்தில் முடிவுக்கு வந்து விட்டது. 

அரசாங்கம் தற்பொழுது செலவு செய்யும் அளவிற்கு உள்ள வரம்பு, வாங்குவதற்கு பொருட்களும், சேவைகளும், மனித உழைப்பும் கிடைக்கும் வரைதான்.

அதாவது, இவைகள் வாங்குவதற்கு கிடைக்கும் வரை, அரசாங்கம் செலவை குறைக்க வேண்டிய தேவை இல்லை. 

அரசாங்கம் தன் செலவை அதிகரிக்காமல் இருப்பதற்கு, பணவீக்கத்தையே, விலை ஏற்றத்தையே தடையாக சுட்டிக் காட்டுகிறது. 

ஆனால், உற்பத்தியை அதிகரிக்கும் இலக்குடன் செய்யும் செலவு, செலவின் அளவிற்கு பொருட்களை உற்பத்தி செய்து, அதற்கு தீர்வாக உள்ளது.

ஜப்பானை பாருங்கள்: ஒரு சிறிய நாடு பொதுப் பணிகளுக்கும், பொது சேவைகளுக்கும் தொடர்ந்து செலவினை செய்து, பணவீக்கம் இன்றி உலகின் மிக நவீன பொருளாதாரமாக மாறியது,  

China? அனைத்து நாடுகளையும் உற்பத்தியில் விஞ்சும் ஒரு வளர்ச்சி அதிசயம். பணவீக்கம் இன்றி. அனைத்தும் அதன் சொந்த நாணய சக்தியால் நடக்கிறது. ஒவ்வொரு நாடும் ஏன் இதைச் செய்ய மறுக்கிறது?

தன்னுடைய சொந்த பணத்தை உருவாக்கி, செலவு செய்யும் மாபெரும் அதிகாரம் ஒவ்வொரு நாட்டிடமும் இருந்தாலும், வறுமையை முற்றிலுமாக ஏன் அழிக்க வில்லை?

வேலை செய்ய மக்களும், மற்ற வளங்களும் வேண்டிய அளவிற்கு உள்ளது. உற்பத்தியை அதிகரிக்க தடுப்பது எது?

ஏழ்மையை அழிக்கும் அளவிற்கு பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க முடியும், அது ஏன் நடக்க வில்லை? 

அனைவரது வாழ்க்கை தரத்தையும் உயர்த்த, இன்று போதுமான உணவு, உறைவிடம், உடைகள் உள்ளன. பழைய காலங்களில் இருந்த தட்டுப்பாடு இப்பொழுது இல்லை. அப்படி இருந்தும், அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கவில்லை என்றால், உற்பத்தி பெருமளவில் தனியார் மூலதனத்தால் நடப்பதாலா? 

China, பொது நிறுவனங்களின் மூலம் உலகிலேயே அதிக அளவு உற்பத்தி செய்து, உற்பத்தியிலாவது இதற்கு தீர்வு கண்டுள்ளதா?

இதற்கு உண்மையான தடை என்ன? 

பண கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தினால், தங்க கையிருப்பை சார்ந்த வரம்பு இல்லாமல், தன்னுடைய சொந்த பணத்தை உருவாக்கி, செலவு செய்யும் மாபெரும் அதிகாரம் தன்னிடம் உள்ளது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ளாமல் இருப்பதே நிஜ மாற்றத்திற்கான தடை.

PoorNoMore "ஏழைகளே இனி இல்லை" அமைப்பில் இருந்து, நான் ராஜேந்திர ராசு. 

வறுமையை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்ற உலகளாவிய தோல்வி மனப்பான்மையை நாங்கள் நிராகரிக்கிறோம். 

"என்னடா இவரு, பல்லாயிரம் வருசமா இருக்குற வறுமை, இனிமே இருக்காதுன்னு சொல்றாரு. நாம எப்படி வறுமையில் இருந்து வெளியில வர முடியும்"னு, நீங்கள் நினைக்கலாம். 

கற்பனை செய்து பாருங்கள்:  

வயல்களிலும் தொழிற்சாலைகளிலும் உழைக்கும் தொழிலாளர்கள்,

முதலாளிகளின் சொகுசு கார்களுக்கு எரிபொருளாகும் அவர்களின் வியர்வை.
லாபங்களால் நிரம்பி வழியும் கணக்கு புத்தகங்கள்.
ஒரு சிலரிடம் மட்டுமே சென்று கொண்டிருக்கும் உற்பத்தி செல்வம்.
உயிர்வாழ ஊதியத்திற்காக வெடிக்கும் போராட்டங்கள்.  

பற்றாக்குறையில் இருப்பதாக சொல்லப்படும் மூலதனத்தின் முன், 
உழைப்பு குறைத்து மதிப்பிட படுவதால், வறுமை வாழ்க்கையில் பின்னிப் பிணைந்துள்ளது.

1971-ல், பொது மூலதனத்தின் சக்தி -
அதாவது அரசாங்கத்தினுடைய பணத்தை உருவாக்கி செலவு செய்யும் தனிப்பெரும் அதிகாரம்—  
முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது.  

ஆனால் அந்த பொருளாதார விடுதலை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.  

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மௌனத்தை தேர்ந்தெடுத்தன,

வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பதிலாக செல்வத்தை சிலரிடம் குவிய செய்தன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வறுமை தவிர்க்க முடியாததாக இருந்தது - ஏற்றுக்கொள்கிறோம்.  

ஆனால் 1971-க்குப் பிறகு?  
ஏழ்மை இருப்பதற்கு எந்த ஒரு நியாயமும் இல்லை.  

அந்த ஆண்டு அப்படி என்னதான் நடந்தது?  

ஒரு வரலாற்று மாற்றம், அரசாங்கங்களுக்கு மகத்தான அதிகாரத்தை வழங்கியது :

தங்கத்துடன் விலங்கிடப்படாமல், புதிய பணத்தை சுதந்திரமாக உருவாக்கி செலவழிக்கும் அதிகாரம் கிடைத்தது. இந்த மாற்றத்தை பற்றி, நிபுணர்கள் சொல்லும் கருத்தை கேட்போம்:

1971 ஆம் ஆண்டு, America, டாலரை தங்கமாக மாற்றும் முறையை முடிவுக்கு கொண்டு வந்தது, பண கட்டமைப்பு வரலாற்றிலேயே அதி முக்கிய தருணம். இது Bretton Woods அமைப்பை முழுவதுமாக முடிவுக்குக் கொண்டு வந்து, சுயமதிப்பு இல்லாத, காகித பணத்தின் சகாப்தத்திற்கு வழிவகுத்தது, 
அரசாங்கங்களுக்கு அவர்களின் பண விநியோகம் மற்றும் நிதிக் கொள்கையின் மீது முன் எப்போதுமே இல்லாத முழு சுதந்திரத்தை கொடுத்தது." Barry Eichengreen, from Exorbitant Privilege* (2011) 

1971 ஆம் ஆண்டு Bretton Woods முறை முடிவுக்கு வந்த பிறகு, தங்கத்தின் மதிப்புடன் இணைக்கப்பட்ட, தங்கத்தின் மதிப்பை பெற்ற பண அமைப்பு முறையில் இருந்து விடுபட்டு, எந்த மதிப்புமிக்க பொருள் உடனும் இணைக்கப்படாத, சுய மதிப்பற்ற காகித பண அமைப்பு முறை நடைமுறைக்கு வந்தது.
தேசிய அரசாங்கங்களும் மத்திய வங்கிகளும் தங்க இணைப்பு பண அமைப்பு முறையில் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுபாடுகளில் இருந்து விடுபட்டு, உள்நாட்டு பொருளாதார முன்னுரிமைகளுக்கு மிகவும் இணக்கமான பணவியல் கொள்கைகளைப் பின்பற்ற அனுமதித்தது. From Deutsche Bundesbank Monthly Report, March 1974.

Narration (Resume): விவரிப்பு (தொடர்ச்சி):
நிபுணர்கள் சரியாக சொன்னார்கள்—
அரசாங்கம் பணத்தை உருவாக்கி செலவழிக்கும் சக்தியை மீட்டெடுத்தது.

ஆனால் இந்த ஏழ்மையை ஒழிக்கும் சக்தி, பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டது.

இது தினசரி வாழ்க்கையே பெரும் போராட்டமாக இருக்கும் மக்களுக்கு எதிராக நடக்கும், மிகப் பெரும் துரோகம்.

வாழ்க்கைத் தரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நாங்கள் மறுக்கவில்லை -

குடிசைகள் கீழே ஒட்டி கிடக்கும் போது, உயரமான கட்டிடங்கள் நிமிர்ந்து நிற்கின்றன.

வெற்றிக்கு வெகுமதி அளிக்கப் படட்டும்.
ஆனால் வறுமையை ஏன் உயிரோடு வைத்திருக்க வேண்டும்?

தொழிலாளர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை அளிக்க அரசாங்கங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த முடியும், ஆனால் ஊதியத்தை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் உயர்த்தும் அதிகாரம் இருந்தபோதிலும், அரசாங்கம் அதைச் செய்யத் தவறி விட்டது.

தவறான கொள்கைகளான, குறைந்த தற்காலிக ஊதியம் மற்றும் பிற்போக்கு வரிகள் தான் குற்றவாளிகளா?

PoorNoMore இந்த ஆராய்ச்சியிலிருந்து உருவானது.

உலகம் ஏழ்மையை வெல்ல முடியாது என்று ஏற்றுக்கொள்ளும் போது, PoorNoMore அது எப்படி பொய் என்று வெளிப்படுத்தி, இப்போது அதை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்பதை நிரூபிக்கிறது. 

பெரும் வளர்ச்சி அடைந்தவர்களை நாம் கொண்டாடுகிறோம்,
ஆனால் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்கும் போது - உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் போது, முதல் அளித்தவரின் செல்வம் மட்டும் வளர்ந்து கொண்டே இருக்கிறது, ஏழை தொழிலாளிகள் மட்டும் ஏழைகளாகவே என்றும் இருக்கின்றனர்?

பணம் படைத்த முதலீட்டாளர்கள் வெகு சிலரே என்றாலும்,
அவர்கள், கொள்கைகள் மற்றும் பணம் சார்ந்த அனைத்தின் மீதும், மிகுந்த அதிகாரத்தை செலுத்தி, ஏழ்மை தொடர செய்தனர்.

ஆனால், முதலீட்டின் அந்த தட்டுப்பாடு 1971 இல் முடிவுக்கு வந்தது. 

மூலதனம் பற்றிய ஒரு மாபெரும் தவறான புரிதல் இதற்கு காரணமாக இருந்தது.

அந்த முதலீட்டாளர் பணம் எங்கிருந்து வந்தது? - 

புழக்கத்தில், சேமிப்பில் உள்ள அனைத்து பணமும், அரசாங்கத்திடம் மட்டும் தான் உருவாக முடியும். 

அரசாங்கம் செய்யும் செலவுகள் தான், பொருளாதாரத்திற்கு பணத்தினை கொடுக்கிறது. 

அரசாங்கம் செய்யும் இந்த செலவுகள், பொருளாதார கொள்கைகளாலும், செலவின திட்டங்களாலும், அமைப்பு ரீதியாகவும், பணம் உள்ளவர்களிடமே மீண்டும் மீண்டும் சேர்ந்து கொண்டே இருக்கிறது. 

அரசாங்கத்தின் இந்த சக்தி அளவற்ற சக்தி. 

இதற்கு வரம்பு, உண்மையான வளங்கள் கிடைப்பது மட்டுமே : 
மனித வளம், பொருட்கள், இயந்திரங்கள், பட்ஜெட்டுகள் மற்றும் பாராளுமன்ற ஒப்புதல்கள்.

வரம்பற்றது, ஆனால் வளங்களுக்கு கட்டுப்பட்டது.

நிபுணர்கள் இந்த மாற்றத்தை பற்றி சொல்லும் கருத்தை கேட்போம்:

"தங்கத்துடன் பணத்திற்கு இருந்த இணைப்பை துண்டிப்பது, பணத்தினை உருவாக்கி செலவு செய்யும் அரசாங்கத்தின் அதிகாரத்தை கட்டவிழ்த்துவிடும் என்பது கேம்ப் டேவிட்டில் இருந்த நிக்சனின் குழுவிற்கு தெரியும். ஆனால் அவர்கள் அதை, வேண்டும் என்கிற அளவிற்கு செலவு செய்வதற்கான சுதந்திரம் என்று விற்க வில்லை, சூதாட்டகாரர்களுக்கு எதிரான கேடயமாக விற்றார்கள், . உண்மையான புரட்சி மறைக்கப்பட்டே இருந்தது." - Jeffrey Garten, From *Three Days at Camp David*

"நிக்சன் இதை பணவீக்கத்திலிருந்து தற்காலிக நிவாரணம் என்று வடிவமைத்தார், தங்க இருப்புகளிலிருந்து அரசாங்க நிதி விரிவாக்கத்தை அது எவ்வாறு விடுவித்தது என்பதை வெளிப்படையாக சொல்லாமல் தவிர்த்துவிட்டார்." - From Federal Reserve History.

"ஒரு மந்திரவாதியின் கை சூழ்ச்சி போல: உள்நாட்டு கட்டுப்பாடுகள் கவனத்தை திசை திருப்ப, வார்த்தை ஜாலங்களுக்கு பின்னால், செலவழிக்கும் சக்தியின் விடுதலை மறைக்கப்பட்டது." [Barry Eichengreen, From *Hall of Mirrors*]  

Narration (Resume):

நிபுணர்களின் கருத்தை கேட்டோம்.

இதை கற்பனை செய்து பாருங்கள்:

நாட்டில் அரசாங்க பணம் புழக்கத்தில் இல்லா விட்டால், உற்பத்தி நின்று விடும்—
வணிகங்கள் இருக்காது, வேலைகள் இருக்காது, எதுவுமே நடக்காது.

நாம் அதை அனுபவித்திருக்கிறோம்:
2016 பணமதிப்பிழப்பு ஒரு கொடுங்கனவு,
ஒரே இரவில் பணம் மறைந்து, முழு நாடும் உறைந்து போனபோது, ஏற்பட்ட குழப்பம் நம் அனைவருக்கும் நினைவிருக்கிறது.

பண புழக்கம் இருந்தால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதையும் 2016 நமக்கு காட்டுகிறது. 

பண புழக்கம் இல்லாதது இந்த அளவு மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் என்றால், அனைத்து மக்களின் வாழ்க்கை தரமும் உயரும் வகையில், அந்த புழக்கத்தை அதிகரிப்பதற்கு என்ன தடை உள்ளது? 

வரிசையில் கடைசியில் நிராதரவு அற்று சீர்குலைந்து நிற்கும் மனிதனின் வாழ்க்கைத்தரம் உயர்வு, அந்த புழக்கத்தால் நடக்கும் என்றால், அதை நடைபெற விடாமல் செய்வதற்கு, அந்த உயரிய சாத்தியத்தை விட, பெரிய காரணம் இருக்க முடியுமா என்ன?

ஆனாலும், அரசாங்கம் அதிக அளவில் வங்கிக் கடனால் நடக்கும் வளர்ச்சியைத் தேர்ந்தெடுக்கிறது. 
வேற்று சிந்தனையே இல்லாமல் கடன்-பண விநியோகத்தை பல மடங்கு உயர்த்துகின்றன. 
ஏன், அது பணம் உள்ளவர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்கும் என்பதாலா?

அந்த நாணய உருவாக்க சக்தியின் ஒரு பகுதியை
வறுமையை முற்றிலுமாக ஒழிக்கும் செலவீனமாக, ஏன் மாற்றக்கூடாது?

அதனை தடுப்பது எது?

பணத்தின் உருவாகும் மற்றும் கைமாறும் வரிசை flow sequence பற்றி ஏன் தவறாக சொல்லப் படுகிறது. ஏன் அரசாங்கத்தின் அதிமுக்கிய அதிகாரமான, பண உருவாக்கும் அதிகாரம், மறைக்கப்படுகிறது :

பணம், அரசாங்கம் செய்யும் செலவில் இருந்து தோன்றுகிறது. 
அரசு முதலில் செலவிடுகிறது,

அதன் மூலம், வரி செலுத்துவதை சாத்தியமாக்கும் பணத்தை மக்களிடம் சேர்க்கிறது. 

அந்த பணம் வரியாக அரசாங்கத்திடம் கொடுக்க படுகிறது. அதாவது, எங்கிருந்து பணம் தோன்றியதோ, அங்கேயே திருப்பி கொடுக்கப் படுகிறது. 

அப்படியானால், வரி, புழக்கத்தில் இருந்து பணத்தை நீக்கும் நடவடிக்கையா, அல்லது அரசாங்கம் செய்யும் செலவிற்கு அளிக்கப்பட்ட நிதியா?

 தான் செய்யும் செலவில் இருந்து, தனது பணத்தை உருவாக்கும் அரசாங்கத்திற்கு, வரி மூலம் பணம் எதற்கு?

வரி அரசாங்க செலவினங்களுக்கு நிதியளிப்பதில்லை -
அவை வரிசையில் பின்னால் வருகின்றன.

முதலில், அரசு செலவிடுகிறது,
வரி செலுத்துவதை சாத்தியமாக்கும் பணத்தை உருவாக்குகிறது.

அந்த வரிசையை தெளிவாகப் பாருங்கள், சிக்க வைக்கும் பொறி நிரந்தரமாக சரிந்துவிடும்.


இதுதான் கொடுமையான உண்மை: அரசாங்கம் செலவு செய்யாவிட்டால், பொருளாதாரத்தில் பணம் இருக்காது.


1971 ம் வருட தவறான புரிதல் -
அரசாங்கம் செய்யும் செலவிற்கான பணம் எங்கிருந்து வருகிறது? - என்பதுதான்.

அது பல நூறு கோடி மக்களின் வாழ்க்கையை அழித்துவிட்டது..

PoorNoMore அதை வெளிப்படுத்துகிறது.

தலைவர்களும் நிபுணர்களும் எங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள் 

அதனால்தான் உங்களிடம் நேரடியாகச் சொல்கிறோம்—

இந்த உண்மையை பரப்புங்கள்.


எங்கள் நோக்கம்:

ஏழைகளே இனி இல்லை என்று உலகம் முழுவதும் சொல்ல வைப்பது, முழுவதுமான வறுமை ஒழிப்பு, மற்றும் அனைவருக்கும் உயர்ந்த வாழ்க்கைத் தரம்.

பணத்தின் உண்மையான இயல்பு உலகையே மாற்றுவதை.
சாத்தியமாக்க, எங்களுடன் சேருங்கள்!

படித்தவர்களும் கூட இந்த தவறான புரிதலுக்கு பலி ஆகிறார்கள் -

தங்கத்துடன் இணைக்கப்பட்ட பண கட்டமைப்பு காலங்களில் படித்தவர்கள், வரிகளை கொண்டுதான் அரசாங்கம் செலவு செய்யவேண்டும் என்று படித்தனர். 

ஆனால் அந்த பட்ஜெட் நடைமுறை, தங்கத்துடன் இணைக்கப்பட்ட குறிப்பிட்ட பண கட்டமைப்பு காலங்களுக்கு மட்டும் பொருந்தும் என்று சொல்லிக் கொடுக்கப் பட்டதா என்று தெரியவில்லை.

பணத்திற்கு தங்கத்தினால் வந்த மதிப்பு முறிக்கப் பட்டது,
ஒரு அளவிட முடியாத மாபெரும் தாக்கத்தை உண்டாக்கும் நிகழ்வு. 

ஆனால் அது எதுவோ ஒரு அன்றாட நிகழ்வு போல் அலட்சியத்துடன் கருதப் படுகிறது, 

அதன் விளைவுகள் முற்றிலுமாக மறைக்கப் பட்டது. 

அந்த மாற்றம், ஏழ்மையை அடியோடு ஒழிக்கும், அதனால் கடைக்கோடி மக்களையும் வசதியான வாழ்க்கைக்கு உயர்த்த முடியும் என்பதால், மறைக்கப்பட்டதா? 

இதுவே, பணக்காரர்களுக்கு சாதகமான மாற்றம் என்றால் மறைக்கப் பட்டிருக்குமா?

இன்றைய பணம்:

அதற்கு சுய மதிப்பு இல்லை, அது வெறும் காகிதம், ஆனால், வரியை தீர்க்கக் கூடிய சக்தி அதற்கு உள்ளது.

பணம் - பொருட்களை வாங்குகிறது, 

சேமிக்கிறது, 

வரி செலுத்துகிறது - என்பதால், அதை மதிப்பு மிக்கதாக நாம் உணர்கிறோம். 

ஆனால் அது உருவாகும் இடம், அரசாங்கத்தின் செலவில் இருந்தும், அரசாங்கத்தால் முழுவதுமாக ஒழுங்குபடுத்தப்பட்ட வங்கிகள் கொடுக்கும் கடனில் இருந்தும். 

அரசாங்கம், தன்னுடைய பணத்திற்கு உள்ள அபரிதமான சக்தியை உணர்ந்ததாகவும் தெரியவில்லை, 

அந்த சக்தியை வங்கிகளுக்கும் கொடுத்து உள்ளோம் என்ற புரிதல் உள்ளதாகவும் தெரியவில்லை. 

வங்கிகளின் பண வெளியீட்டால் அதிகரித்துக் கொண்டே இருக்கும் பணப்புழக்கம் பிரச்சினை இல்லை, ஆனால், அரசாங்க செலவினால் பணப்புழக்கம் அதிகரிப்பது பிரச்சினை என்பது கேலிக்கூத்து. யாரும் இதை மறுக்க முடியுமா?

இது, ஏழை ஏழையாகவே இருக்க வைக்கிறது, பணக்காரர்களை பணக்காரர்களாவே இருக்க வைக்கிறது. 


கேள்வி பதில் பிரிவு. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பரின் கேள்வியை படிக்கிறேன்:

"பணம் செலவு செய்வது வரம்பற்றதாக இருந்தால், அது மிகையான பணவீக்கத்தை ஏற்படுத்தாதா?" 

புத்திசாலித்தனமான கேள்வி. இல்லை, ஏற்படுத்தாது என்பதுதான் பதில். செலவு முதலில் பொருட்களை உற்பத்தி செய்வதிலும், செலவழித்த பணத்திற்கு ஏற்றவாறு பொருட்கள் மற்றும் சேவைகளை கிடைக்கச் செய்வதிலும் கவனம் செலுத்தினால், அத்தகைய செலவினங்களிலிருந்து எந்த பணவீக்கமும் இருக்காது.

ஜப்பானும் சீனாவும் அதை நிரூபிக்கின்றன: நாடு தழுவிய கட்டுமானங்கள். நிலையான விலைகள்.

இது கொள்கை தேர்வின் நடப்பது, விதி அல்ல.
உங்களுக்கு மேலும் விளக்கம் தேவைப்பட்டால், @PoorNoMoreIndia ற்கு DM செய்யவும்!

அச்சடிக்கும் mint இல் இருந்து, மத்திய வங்கிக்கு பணம் கொடுக்கப்படும் பொழுது, எத்தனை நோட்டுகள் என்று எண்ணப்படுகிறதே ஒழிய, அந்த பணங்களின் மதிப்பை கணக்கிடுவது இல்லை. 

அரசாங்கத்திற்கு பணம் மதிப்பு உள்ளது அல்ல. 

இது தான் குழப்பத்தின் மையம்:


1971க்கு முன் இருந்த தங்கத்துடன் இணைக்கப்பட்ட பணம், சுய மதிப்புள்ள பணம், 

ஆனால் இன்றைக்கு உள்ள பணம் சுய மதிப்பு எதுவும் இல்லாதது. 

இதை தவிர, பணம் வெளியிடுபவருக்கும் உபயோகிப்பவருக்கும் உள்ள வேறுபாடு. 

ஒன்றிய அரசு மட்டும்தான் பணத்தை உருவாக்கும் தனிப்பெரும் அதிகாரத்தை தன்னிடம் வைத்துள்ளது. 

மாநில அரசாங்கங்கள் உட்பட மற்ற அனைவரும் பண உபயோகிப்பவரே.

நான் சொல்வதை திரும்ப சொல்லுங்கள்:

பணம் உருவாக்கும் அரசாங்கம் முதலில் செலவு செய்கிறது,

அந்த செலவு பொருளாதார புழக்கத்திற்கு பணத்தை அளிக்கிறது. 

அதன் பின், பணம் உபயோகிப்பவர் அதனை உபயோக்கிறார்.

 வரி, சேமிப்பு, அன்றாட தேவைகளை வாங்க, விற்க பணம் தேவைப்படுகிறது. 

பணம் உருவாக்குவது தங்கத்துடன் இணைக்கப்பட்டிருந்த காலம், அரசாங்கத்தின் இந்த பணம்-உருவாக்கி-செலவு-செய்யும் அதிகாரத்bc CB தை பயன் படுத்த முடியாமல் செய்துவிட்டது. 

பணம் வழங்கும் அரசாங்கத்திற்கும் பண நெருக்கடி ஏற்பட்டது.

 ஏனென்றால் தங்கத்துடன் பிணைக்கப்பட்ட நாணயம் அனைவருக்கும், அதை உருவாக்கும் அரசாங்கத்திற்கும் மதிப்புமிக்கது. D

அரசாங்கத்தால், தங்க கையிருப்பிற்கும் அதிகமாக பணம் உருவாக்க முடியாத நிலை இருந்தது.

ஆனால் 1971, கதையை முழுவதுமாக மாற்றியது:


அரசாங்கத்தைப் பொறுத்தவரை, 1971 க்கு பிறகு, பணம் என்பது எப்பொழுது வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளும் காகிதம். நமக்கு, அது உயிர்நாடி.


பண கட்டமைப்பு, அதாவது பணம் எவ்வாறு மதிப்பிட பட்டு வெளியிடப் படுகிறது என்பதை பற்றி விரிவாக கேட்டோம்.

 தங்கம் சார்ந்த சுயமதிப்பு உள்ள பண கட்டமைப்பிலிருந்து, சுயமதிப்பு இல்லாத பண கட்டமைப்புக்கு மாறினோம். செலவிடுவதற்கு முன்பே, மதிப்பை பெற்ற பண கட்டமைப்பு முறையில் இருந்து, மதிப்பு உள்ள பொருள் எதையும் சாராமல் உருவாக்கப்பட்டு, அரசாங்கம் வாங்கும் பொருட்களில் இருந்து, மதிப்பை பெறும், பண கட்டமைப்பு முறைக்கு மாறினோம்.

 அதாவது, பணத்தை உருவாக்குவதில் வரம்பு இல்லாமல், வேலையில் அமர்த்த மனித சக்தி மற்றும் வாங்குவதற்கு பொருட்கள் கிடைக்கும் வரை, உருவாக்கக்கூடிய பணத்தினை கொண்டு செலவு செய்யலாம் என்ற பண கட்டமைப்பு முறைக்கு மாறினோம். 

அரசாங்கத்தின் இந்த பண சக்தியை கொண்டு, அனைவரையும் வேலையில் அமர்த்தலாம், அவர்களது குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தலாம் என்று ஏற்பட்ட இந்த நிகழ்வு, பண கட்டமைப்பு முறையின் மாற்றத்தால் நிகழ்ந்துள்ளது.

பண கட்டமைப்பு மாற்றம் - அதாவது பணம் எவ்வாறு மதிப்பிட பட்டு வெளியிட படுகறது என்ற அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் - அரசாங்கம் எப்படி செலவு செய்கிறது, அரசாங்கம் எவ்வளவு செலவு செய்ய முடியும், என்பதை முற்றிலுமாக மாற்றும் என்று யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

 "பண ஆட்சி" அல்லது "பண அமைப்பு" என்று பெயரிட்டுவிட்டு, அதனுடைய இந்த மாபெரும் சக்தியை புரிந்து கொள்ளாமல், எளிதாக கடந்து விட்டோம்.

கொடூரமான உண்மை: அனைவரையும் வசதி உள்ளவர்களாக, ஏழ்மையே இல்லாத பூமியாக ஆக்கியிருக்க கூடிய, இந்த வரத்தை, அதிசய சக்தியை, 50 வருடங்களாக வீணடித்து விட்டோம். 

அத்தனை குடும்பங்களின் சந்தோசத்தையும் அழித்து விட்டோம், இந்த புரிதல் இல்லாததால்.

தங்கத்துடன் இணைக்கப் பட்ட பணம் - உலோகத்திலிருந்து மதிப்பு பெற்றது.

இப்போது?

அரசாங்கம் அதன் கொள்முதல்கள் அதிகரிக்க அதிகரிக்க, வளர்ந்து கொண்டே இருக்கும் மொத்த பணத்தின் மதிப்பு.

என்ன ஒரு அசாதாரண நிகழ்வு - 
பணம் உப யோகிப்பவர்க்கு, அது வரியாக ஏற்றுக்கொள்ள படுவதால், மதிப்பு உள்ளதாகிறது. இருப்பினும்,
வெளியிடுபவருக்கு, அது காகிதம் தான்.

தனியார் மூலதனம் அதன் பீடத்திலிருந்து இறக்கப்பட்டது;

பொது பணம் அதன் மகத்துவத்தையும், அனைத்து மகிமையையும் திரும்பப் பெற்றது.


தங்கம் ஒரு காலத்தில் பணமாக இருந்தது,
பின்னர், தங்கத்துடன் இணைந்த காகிதம் பணமானது.
இந்த பண கட்டமைப்பு, உள்நாட்டு செலவையும், வழங்கக்கூடிய கடனையும், தங்க இருப்பின் அளவிற்கு குறைத்துவிடும்.

பொருளாதாரத்துக்கு மேலும் பணம் வேண்டுமென்றால், புது தங்க சுரங்கங்களை கண்டுபிடிக்க வேண்டும், வெளிநாடுகளை கொள்ளை அடிக்க வேண்டும் அல்லது அதிகம் ஏற்றுமதி செய்து, அதற்கு ஈடாக தங்கத்தை பெற வேண்டும்.


சிந்தித்துப் பாருங்கள்:

தற்பொழுது உள்ள பணம் தங்கத்தில் இருந்து மதிப்பை பெறுவதில்லை - மிளிரும் தங்கம் நமது விதியை நிர்ணயிப்பதில்லை, நம்மை பின்னிழுக்கும், சுயமதிப்பு உள்ள பணம் இப்பொழுது இல்லை.

1971 வரை,  பணம் வங்கிகளில் தங்கமாக மாற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்ததால், உருவாக்கக்கூடிய பணத்திற்கு வரம்பு இருந்தது. 

அதனால், தான் செலவு செய்த தன் பணத்தையே வரியாகவும், கடனாகவும் பெற்று, திரும்பவும் செலவு செய்ய வேண்டிய முடிவற்ற சுழற்சிக்குள் அரசாங்கம் தள்ளப்பட்டது.

இதில் இருந்துதான், வரி வசூலை கொண்டுதான் செலவு செய்ய வேண்டும், வரவையும், செலவையும் சமநிலை படுத்த வேண்டும் என்கிற பட்ஜெட் நடைமுறைகளும், அளவான கடன் என்ற வழக்கமும் எழுந்தது. 

ஆனால், டாலருக்கும் தங்கத்திற்கும் இருந்த அந்த இணைப்பை அமெரிக்கா 1971 ம் வருடம் முடிவுக்கு கொண்டு வந்து, அனைத்து நாடுகளின் பொருளாதார ஆற்றலையும் கட்டவிழ்த்து விட்டது.

இந்த சூழலில், இன்றைய பணமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில், வறுமையை நாம் இறுதியாக எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது?

எளிது: முதலில் பணத்தை புரிந்து கொள்ளுங்கள்.
புழக்கத்தை பற்றி முழுவதுமாக.

அரசாங்க செலவே அனைத்திற்கும் மூலம்.

அரசாங்க செலவு இல்லையென்றால், தனிநபர் சேமிப்பு இல்லை, முதலீடுகள் இல்லை, வசூலிக்க வரிகளும் இல்லை.

இந்த வரிசை
உடைக்க முடியாதது:

முதலில் செலவிடுங்கள், பிறகு மற்ற அனைத்தும் பின்தொடரும். 

அந்தப் புனையப்பட்ட நடைமுறைகளை உடைத்து எறியுங்கள், சங்கிலிகள் சிதறும்.

நிபுணர்களின்  கருத்தை கேட்போம்.

Matthew Desmond From Poverty, by America: 
"சிலரின் விருப்பத்தால் வறுமை தொடர்கிறது. நாம் வறுமையை ஒழிக்க முடியும், ஆனால் அது செல்வந்தர்களுக்கு சாதகமாக இருக்கும் அமைப்புகளை பாதிக்கும். வளங்கள் ஏராளமாக இருக்கும்போது வறுமையை ஏன் பொறுத்துக் கொள்கிறோம்?"

Joseph Stiglitz:
"கோடிக்கணக்கானவர்கள் நலிவடைந்திருக்கும் போது, எல்லா பலன்களும் 1% க்கு போகும்போது, அதன் பெயர் மோசடி - திறமை அல்ல."

ILO/World Bank: 
"தீவிர வறுமை அரசாங்க நிதியின் தோல்வியை பிரதிபலிக்கிறது - ஊதியம் மற்றும் விநியோகம் மூலம் கோடிக் கணக்காவர்களின் வாழ்க்கை தரத்தை அரசாங்கம் உயர்த்தலாம், ஆனால் பின்னடையும் பாதையை தேர்ந்தெடுக்கிறது."

நிபுணர்களின் கருத்தை கேட்டோம்.

1971 நிக்சன் ஷாக் பிரெட்டன் வூட்ஸை கைவிட்டது,

அதில் இருந்து எந்த மதிப்பும் இல்லாமல், சுயமதிப்பற்ற fiat currency பிறந்தது.

டாலர்-தங்கம் இணைப்பு துண்டிக்கப்பட்டது,  மற்ற நாடுகளின் பணங்களுக்கு தங்கத்துடன் இருந்த உறவையும் முறித்தது.  


அனைத்து நாடுகளிலும் உள்ள ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் 15, 1971 பொருளாதார சுதந்திர தினமானது.  


ஒவ்வொரு நாடும் தன் பணத்தினை கொண்டு செலவு செய்யும், தனிப்பெரும் அதிகாரத்தை மீட்டெடுத்து கொடுத்தது Nixon shock,

Policymakers பொருளாதார கொள்கைகளை வடிவமைப்பவர்கள் இதை உணரவில்லை.

ஒரு காலத்தில் வரி மற்றும் கடன் மூலம் செலவு செய்யும் நடைமுறையை தங்க கை இருப்பு கட்டயமாக்கியது.;

71 சுதந்திரத்தை மீண்டும் உயிர்ப்பித்தது.

பணவீக்கம் இல்லாமல் நாடு முழுவதும் உயரிய உள்கட்டமைப்பை உருவாக்க முடியும் என்பதை ஜப்பான் காட்டுகிறது. 

China, பண அதிகாரத்தை தன்னுடைய தனி பாணியில் உபயோகித்து, அதிசயத்தக்க பொருளாதாரத்தை உருவாக்கி உள்ளது.

50 ஆண்டுகள் ஆகிய பிறகும், பணத்தைப் பற்றிய தவறான புரிதல் பல நூறு கோடி மக்களை வறுமையில் சிக்க வைக்கிறது.


அரசாங்கம் பொருளாதாரத்தில் வெறும் பங்களிப்பாளர் மட்டுமல்ல -
அரசாங்கமே அதன் சிற்பி, இயக்குநர்.

கொள்கைகளா? அனைத்தும் அவர்களுடையதே.

பணப்புழக்கமா? அது நேரடியாக அவர்களின் கைகளிலிருந்தே வருகிறது.

அவர்களின் செலவினங்கள்தான் பொருளாதாரத்திற்கு விதையிடுகின்றன:
 நம்மிடத்தில் சேமிப்பாக மாறுகிறது

சேமிப்பு தொழில்-கடன் வாங்க அடித்தளம் ஆகிறது, 

உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை முழு வீச்சில் தூண்டி விடுகின்றன.

'திறந்த, சுதந்திர சந்தை' என்று அழைக்கப் படுவது கூட—
அரசின் கட்டமைப்புக்குள்தான் நடக்கின்றன—
விதிகள், வழிகாட்டுதல்கள், ஏன், அவை சுவாசிக்கும் காற்று கூட அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. 

கட்டவிழ்த்து விடப்படும் அரசாங்கத்தின் ஆக்க சக்தியை கற்பனை செய்து பாருங்கள் :

கண்ணியமான ஊதியம் தரும் வேலைகளால், மேம்படும்  கிராமங்கள், 

பச்சை பசேல் இயற்கை சூழலுக்கு இடையில், தரம் வாய்ந்த அனைத்து வசதிகளையும், சமூக, பொருளாதார கட்டமைப்பையும் கொண்ட கிராமங்களை, நோக்கிய இடம்பெயர்வு, reverse migration.

வரிசையின் கடைசியில் இருப்பவரும்  உண்மையான வாய்ப்புகளை பெறும் அலைகள் உருவாக்கம்.

ஆனால் ........., 
காலாவதியான பட்ஜெட் நடைமுறை - நாட்டின் பட்ஜெட்டை, ஒரு குடும்பத்தின் சிக்கன கணக்கு போலக் கருதுவது - இவை அனைத்தையும் வீணாக்குகின்றன,

பல தலைமுறைகளுக்கு கல்வி, சுகாதாரம், நல்ல வாழ்க்கை, ஒரு நியாயமான வாய்ப்பு - ஆகியவை அனைத்தும் மறுக்க பட்டிருக்கின்றன.

பணவீக்கமா? அது ஒரு வெறும் மாயை.

முதலில் உற்பத்தியை திட்டமிடுங்கள், அதை நீங்கள் முழுமையாக தவிர்த்துவிடலாம்.

நாட்டின் பணத்தினை உருவாக்கும் உயரிய சக்தியை, அதிகாரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால், அது எளியவர்களை நிர்வகிப்பது மட்டுமல்ல—வறுமையை முற்றிலுமாக ஒழித்து, ஒரு உண்மையான சமூகப் புரட்சியின் மூலம் வாழ்க்கையில் ஒளியேற்றும்.


பாகம் ஒன்று நிறைவு:
வறுமையை பற்றிய கட்டுக்கதை தகர்க்கப்பட்டது—

1971-இல் மறைக்கப்பட்ட அட்சய பாத்திரம் இன்று வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது.

PoorNoMore ஏழைகள் இனி இல்லை அமைப்பில் இணையுங்கள்:

அரசாங்கம் ஒழிக்க மறுக்கும் வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவோம்:

X-ல் @PoorNoMoreIndia-ஐப் பின்தொடருங்கள், இதை பகிருங்கள், ஒரு தலைவரை tag செய்யுங்கள்.

ஏழைகள் அற்ற உலகம்—
வறுமையற்ற ஒரு உலகம்.

இனி இல்லை
வறுமை!


நன்றி. வணக்கம். விடை பெறுவது, ராஜேந்திர ராசு.


Comments