வெளியிடும் பணத்தினை கொண்டு, செலவு செய்யும் ஒன்றிய அரசாங்கம், மாநிலங்களில் இருந்து வரியின் மூலம், பண நீக்கம் செய்வது, புரிதல் இல்லாத, நியாயம் அற்ற, தேவை அற்ற மக்கள் விரோத செயல் ஒரு மாநிலத்தில் இருந்து ஒன்றிய அரசு திரட்டிய வரியை விட, குறைவாகவே அந்த மாநிலத்தில் செலவு செய்யும் பொழுது, அந்த மாநிலம் வேண்டும் நிதியினை கொடுக்காமல் இருப்பது, பண அமைப்பு பற்றிய எந்த வித புரிதலும் இல்லாத மாபெரும் மக்கள் விரோத செயல், அநீதி. எப்படி என்பதை பார்ப்போம். பணமயமாக்கப் பட்ட பொருளாதாரத்தில், பண புழக்கமே வளர்ச்சி பொருள் ஈட்டும் செயல்கள் பணத்தினை கொண்டு நடைபெறும் பொழுது, பண புழக்கம் அதற்கு இன்றியமையாததாகி விடுகிறது. பணம் புழக்கத்தில் தடை இல்லாமல், எந்த அளவு அனைவரையும் உள்ளடக்கி கைமாறி கொண்டு இருக்கிறதோ, அந்த அளவிற்கு, அதிக வேலை வாய்ப்பும், தனி நபர் வளர்ச்சியும் இருக்கும். பண புழக்கம் குறைவாக இருப்பதால் மட்டும் அல்லாமல், தற்பொழுது உள்ள பொருளாதார, சமூக கட்டமைப்பினால், பலர் அந்த புழக்கத்தின் உள்ளேயே இல்லாமல் இருக்கின்றனர். பணம் வெளியிடும் ஒன்றிய அரசு தவிர, மற்றவர்களுக்கு பணம் மதிப்பு மிக்கது ஆன...